×

தனது சாதனையை தானே முறியடித்த இங்கிலாந்து: ஓருநாள் போட்டியில் 481 ரன்கள் குவித்து அசத்தல்

டிரென்ட்பிரிட்ஜ்: இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து, அதிக ரன் குவித்து உலக சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் ஒரேயொரு டி20 போட்டியிலும் விளையாட உள்ளது. இதுவரை 2 ஒருநாள் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரண்டிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2 - 0 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் நேற்று ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 481 ரன்கள் குவித்தது. ஒருதினப் போட்டிகளில் ஆண்கள் அணி அடித்துள்ள அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்னர் 2016 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக இதே ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இங்கிலாந்து, 444 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. இந்நிலையில், இங்கிலாந்து தனது சாதனையை தானே முறித்துள்ளது. இதையடுத்து, 482 ரன்கள் என்ற கடின் இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. டிராவிஸ் ஹெட் 51 ரன்களும், மார்கஸ் ஸ்டோனிஸ் 44 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் ஆஸ்திரேலிய அணி 37 ஓவர்களில் 239 ரன்களில் ஆல் அவுட்டாகினர்.

உலகக் கோப்பைக்கு தயார் அடுத்த ஆண்டு உலகக் கோப்பை நடைபெற உள்ள நிலையில், ஜாசன் ராய், பட்லர், பேர்ஸ்டோ, ஹாலட், ரூட், அலி என முக்கியமான வீரர்கள் பார்மில் உள்ளது இங்கிலாந்து அணிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...