×

9 நாள் தர்ணா போராட்டம் டெல்லி முதல்வர் வாபஸ் : வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: டெல்லியில் கவர்னர் அலுவலகத்தில் கெஜ்ரிவால் கடந்த 9 நாட்களாக நடத்தி வந்த தொடர் காத்திருப்பு போராட்டத்தை நேற்று முடித்துக் கொண்டார். டெல்லியில், கடந்த நான்கு மாதங்களாக அரசு பணிகளை மேற்கொள்ளாமல் ஐஏஎஸ் அதிகாரிகள் பகுதிநேர ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருவதாகவும், அமைச்சர்களின் ஆலோசனை கூட்டங்களை அதிகாரிகள் புறக்கணிப்பதாகவும் பரபரப்பு புகாரை முதல்வர் கெஜ்ரிவால் சமீபத்தில் தெரிவித்தார். இதை தொடர்ந்து கெஜ்ரிவால் தனது அமைச்சரவை சகாக்களுடன் கடந்த வாரம் திங்களன்று கவர்னர் அலுவலகத்தில் திடீரென காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினார்.

9 நாள் தொடர் போராட்டத்திற்கு பின் அமைச்சர்களின் ஆலோசனை கூட்டங்களில் உயரதிகாரிகள் பங்கேற்ற தகவல் வெளியானது. இதையடுத்து கடந்த 9 நாட்களாக கவர்னர் அலுவலகத்தில் நடத்தி வந்த காத்திருப்பு தர்ணா போராட்டத்தை கெஜ்ரிவால் முடிவுக்கு கொண்டு வந்தார்.
இதுபற்றி துணை முதல்வர் சிசோடியா கூறுகையில், “அரவிந்த் கெஜ்ரிவால் கவர்னர் அலுவலகத்தை விட்டு வெளியே வந்துவிட்டார் என்றார்.
இதற்கிடையே, கவர்னர் அலுவலகத்தில் முதல்வர் கெஜ்ரிவாலின் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்