×

ஆந்திர அரசு ஆலோசகர் பதவியிலிருந்து நிர்மலா சீதாராமனின் கணவர் ராஜினாமா

அமராவதி: ஆந்திர அரசின் ஆலோசகர் பதவியை, பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதராமனின் கணவர் பரகலா பிரபாகர் ராஜினாமா செய்துள்ளார். ஆந்திர அரசின் தகவல் தொடர்பு ஆலோசகரான பரகலா பிரபாகரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 4ம் தேதி முடிவடைய உள்ளது. இதற்கு முன்னதாக நேற்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு 2 பக்க கடிதத்தை அனுப்பி உள்ளார்.

அதில் பிரபாகர் கூறுகையில், ‘‘ஆலோசகராக நான் பதவி வகிப்பதால் மாநில உரிமைக்காக மத்திய அரசுடனான முதல்வரின் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் கேள்விக்குறியாக்குகின்றன. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்த செயல் மிகுந்த வலியை தருகிறது. இந்த அரசின் நம்பகத்தன்மை எந்தவிதத்திலும் என்னால் பாதிக்கப்படக் கூடாது. எனவே, முதல்வரின் விருப்பத்திற்கு மாறாக என் பதவியை ராஜினாமா செய்வதில் உறுதியுடன் உள்ளேன். தயவுசெய்து ராஜினாமாவை ஏற்கவேண்டும்’’ என கூறியுள்ளார். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசின் கூட்டணியிலிருந்து ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மணிப்பூரில் வாக்குச்சாவடியை சூறையாடிய வன்முறைக் கும்பல்!