×

சதுர்த்தி விழாவையொட்டி ஐதராபாத்தில் 57 அடி உயர விநாயகர் சிலை நிறுவ முடிவு

ஐதராபாத்: தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 57 அடி உயர விநாயகர் சிலையை நிறுவ முடிவு செய்யப்பட்டடுள்ளது. தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள கைரதாபாத்தில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி சதுர்த்தி வருவதையொட்டி 11 நாட்கள் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாட  கணேஷ் உத்சவ் கமிட்டி முடிவு செய்துள்ளது. கடந்த 1954ம் ஆண்டு சங்கரய்யா என்ற விடுதலை போராட்ட வீரர் இந்த அமைப்பை தொடங்கினார். தற்போது அவரது சகோதரர் சுதர்சன் இந்த பாரம்பரிய விழாவை சிறப்பாக கொண்டாடிவருகிறார்.

இதையொட்டி ஐதராபாத்தில் 11 நாள் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுதர்சன் கூறியதாவது: இந்த விழாவின்போது 57 அடி உயர விநாயகர் சிலை இங்கு நிறுவப்பட உள்ளது. இந்த சிலை 7 தலைகள் கொண்டதாக இருக்கும். ரசாயனம் கலக்காத களிமண்ணால் இந்த சிலை செய்யப்படும். விழாவின் இறுதி நாளான 11 வது நாளில் இந்த பிரம்மாண்ட விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று உசேன் சாகர் ஏரியில் கரைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்