×

தனியார் மருத்துவமனை மருந்தகத்தில் போலி பில் தயாரித்து 11.5 லட்சம் கையாடல்: 5 பெண் ஊழியர்களிடம் விசாரணை

சென்னை: வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை மருந்தகத்தில் போலி பில்கள் மூலம் 11.50 லட்சம் பணத்தை கையாடல்  செய்ததாக 5 பெண் ஊழியர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை வடபழனி காவல் நிலையத்தில் ஆகாஷ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ஜெயராணி காமராஜ் புகார் ஒன்று அளித்தார். அதில்,  வடபழனி நூறடி சாலையில் ஆகாஷ் என்ற பெயரில் மருத்துவமனையுடன் மருந்தகமும் நடத்தி வருகிறேன். எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை  பெறும் புறநோயாளிகள் மற்றும் உள் நோயாளிகளுக்கு மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக  சுழற்சி முறையில் புனிதவதி, திவ்யா, வேதவதி, சுபாஷினி, பாரதி ஆகிய 5 பெண் ஊழியர்கள் பணியில் உள்ளனர். கடந்த மாதம் மருத்துவமனை  மருந்தகத்தின் ஆண்டு கணக்குகளை தணிக்கை செய்தோம். அப்போது போலி பில்கள் மூலம் 11.5 லட்சம் பணம் கையாடல் செய்தது  கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட மருந்தகத்தில் பணியில் இருந்த 5 பெண்களிடம் நாங்கள் விசாரணை நடத்தினோம். அப்போது 5 பெண் ஊழியர்களும்  மருந்துகள் வாங்கும் நோயாளிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, போலி ரசீதுகள் மூலம் பணத்தை கையாடல் செய்ததாக ஒத்துக்கொண்டனர்.  அப்போது கையாடல் செய்த பணத்தை திருப்பி தருவதாக எங்களிடம் உறுதி அளித்தனர். ஆனால் உறுதி அளித்து ஒரு மாதங்கள் ஆகியும் கையாடல்  செய்த 11.50 லட்சம் பணத்தை தராமல் ஏமாற்றி வருகின்றனர். எனவே மருந்தகத்தில் 11.50 லட்சம் கையாடல் செய்த 5 பெண் ஊழியர்கள் மீது  நடவடிக்கை எடுத்து அவர்களிடம் இருந்து ெபற்று தர வேண்டும்.

இவ்வாறு புகார் அளித்திருந்தார்.புகாரின்படி வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து, மோசடி செய்த மருத்துவமனை மருந்தக பெண் ஊழியர்களான புனிதவதி, திவ்யா, வேதவதி,  சுபாஷினி, பாரதி ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் வேறு யாரேனுக்கும் தொடர்பு உள்ளதா என்பது  குறித்தும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...