×

இன்ஜினியரிங் ஜாப் ஒர்க்கிற்கு தொகை வழங்க பொதுத்துறை நிறுவனங்கள் இழுத்தடிப்பதாக புகார்

கோவை:  பொதுத்துறை நிறுவனங்கள் தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதால், ஜிஎஸ்டி வரி செலுத்த முடியாமல் இன்ஜினியரிங் ஜாப்ஒர்க் மேற்கொள்ளும் குறுந்தொழில் கூடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுந்தொழில் கூடங்கள் ஜாப் ஒர்க் மேற்கொள்கின்றன. ஒவ்வொரு மாத வர்த்தத்துக்கான 18 சதவீத வரியை அடுத்த மாதம் 20ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். ஆனால், குறுந்தொழில் கூடங்கள் தாங்கள் சப்ளை செய்யும் உதிரிபாகங்களுக்கான ஜாப் ஒர்க் பில்களுக்கான தொகையை பெற 6 மாதம் வரை ஆவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டாக்ட்) தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது:
கோவையிலுள்ள குறுந்தொழில் கூடங்கள் இன்ஜினியரிங் பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல், ரயில்வே,  ராணுவத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் உதிரிபாகம் சப்ளை செய்கின்றனர்.

தனியார் நிறுவனமாக இருந்தாலும், மத்திய அரசு நிறுவனமாக இருந்தாலும் ஜாப் ஒர்க்கிற்கான பில் தொகையை அந்தந்த மாதம் வழங்குவதில்லை.
சில நிறுவனங்கள் மட்டும் 60 நாளில் வழங்குகின்றனர். பெரும்பாலாவை 90 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை அவகாசம் எடுத்து கொள்கின்றனர்.
ஒவ்வொரு மாதமும் 20ம் தேதிக்குள் முந்தைய மாதத்திற்கான வரியை செலுத்த வேண்டும் என்பதில் கறாராக உள்ள மத்திய ஜிஎஸ்டி குழு, அதற்குரிய பில் தொகையை தனியாரோ, பொதுத்துறை நிறுவனங்களோ குறுந்தொழில் கூடங்களுக்கு செலுத்த வேண்டும் என்கிற விதிமுறையை உருவாக்க வேண்டும் என்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED புதிய கிரெடிட் கார்டு வழங்கக் கூடாது...