×

சுவாரெஸ் 100

உருகுவே அணி நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரெஸ் இன்று தனது 100வது சர்வதேச போட்டியில் களமிறங்குகிறார். ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள  உருகுவே அணி, முதல் லீக் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தியது. 2வது லீக் ஆட்டத்தில் இன்று சவுதி அரேபியாவை  எதிர்கொள்கிறது. ரோஸ்தவில் இரவு 8.30க்கு தொடங்கும் இந்த போட்டி சுவாரெஸ் விளையாடும் 100வது சர்வதேச போட்டியாகும்.

பார்சிலோனா கிளப்  அணிக்காக மெஸ்ஸியுடன் இணைந்து விளையாடி வரும் இவர், 2014 உலக கோப்பையில் இத்தாலி வீரர் ஜார்ஜியோ சியலினியின் காதை  கடித்ததற்காக 4 மாதம் தடை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சவுதி அரேபியாவுக்கு எதிராக சுவாரெஸ் கோல் மழை பொழிவாரா என உருகுவே ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இவர் தேசிய அணிக்காக 99  போட்டியில் 51 கோல் அடித்துள்ளார்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை...