×

காஷ்மீரில் மெஹ்பூபா அரசு கவிழ்கிறது : பிடிபி-பாஜக கூட்டணி முறிவு

ஸ்ரீநகர் : காஷ்மீரில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி - மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி உடைந்தது. பா.ஜ.க.ஆதரவை வாபஸ் பெற்றதால் காஷ்மீரில் மெஹ்பூபா அரசு கவிழ்கிறது. 2016-ம் ஆண்டில் பாஜக - மெஹ்பூபா தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தது. 87 எம்எல்ஏ.க்கள் கொண்ட பேரவையில் பாஜகவுக்கு 25, பிடிபி கட்சிக்கு 28 எம்எல்ஏ.க்கள் உள்ளனர். காஷ்மீரில் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க பிடிபி கட்சிக்கு 44 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்படுகிறது.  

கூட்டணி முறிவு குறித்து பாஜக விளக்கம்

கூட்டணி முறிவு குறித்து ஜம்மு-காஷ்மீர் மாநில பாஜக பொறுப்பாளர் ராம் மாதவ் டெல்லியில் பேட்டியளித்துள்ளார். மக்கள் ஜனநாயக கட்சியுடனான கூட்டணியில் இருந்து முழுமையாக பாஜக வெளியேறியது. அண்மைக்காலமாக காஷ்மீரில் நிலவும் சூழல் காரணமாக இரு கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்துவதே பா.ஜ.க. இலக்காக இருந்தது. ஆனால் பா.ஜ.க. நோக்கத்துக்கு மாறாக காஷ்மீரில் வன்முறை பெருகிவிட்டது என ராம் மாதவ் விளக்கமளித்துள்ளார். காஷ்மீரில் கருத்துரிமைக்கு அச்சுறுத்தல் அதிகரித்துவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆதரவு வாபஸ் கடிதத்தை ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் என்.என்.ஓராவுக்கு பாஜக அனுப்பியது. பிடிபி கட்சிக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என பாஜக பொறுப்பாளர் ராம் மாதவ் தகவல் தெரிவித்துள்ளார். பயங்கரவாதம்,வன்முறை,பத்திரிகையாளர் சுடப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகள்கூட்டணியை பாதித்தன.

காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி தேவை

தற்போதைய சூழ்நிலையில் ஆளுநரிடம் அதிகாரத்தை கொடுப்பதே சரி என்று பா.ஜ.க. கருத்து தெரிவித்துள்ளது. அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் மாநில அரசு தோல்வி அடைந்துவிட்டது என பாஜக பொறுப்பாளர் ராம்  மாதவ் கூறியுள்ளார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED “எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான...