×

சென்னையில் முன்னாள் கல்லூரி மாணவர்களே பெரும்பாலும் வன்முறையில் ஈடுபடுகின்றனர் : காவல்துறை தகவல்

சென்னை: சென்னை மாநகர இணை ஆணையர் அன்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். கல்லூரி திநற்த முதல் நாளான நேற்று பேருந்து உள்ளிட்ட பொதுவெளியில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர் கல்லூரி மாணவர்கள் வன்முறை பக்கம் திரும்பாமல் நல்வழியில் செல்ல அவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தவறான பாதையில் செல்லும் மாணவர்களை திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் மாநிலக் கல்லூரிக்கு சென்று காவல்துறை துணை ஆணையர் மாணவர்களுடன் கலந்து பேசியதாகவும் குறிப்பிட்டார். பெரும்பாலும் முன்னாள் கல்லூரி மாணவர்களே வன்முறையில் ஈடுபடுவதாக குறிப்பிட்டார். வேலை வெட்டியில்லா முன்னாள் மாணவர்கள், இந்நாள் மாணவர்களையும் சேர்த்து கெடுத்து விடுவதாக சாடினார். எனவே வன்முறையில் ஈடுபடும் முன்னாள் மாணவர்களை கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

வன்முறை சம்பவங்களை குறைக்க சுற்றுக்காவலில் ஈடுபடும் போலீஸ் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மாணவர்கள் பேருந்து தினம் கொண்டாட கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மாணவர்கள் பேருந்துகளில் அட்டகாசம் செய்வது பற்றி கல்லூரி முதல்வர் மற்றும் பெற்றோர்களிடம் பேசியதாக கூறினார். கல்லூரிக்கு படிக்க தான் வருகிறோம் என்பதை மாணவர்கள் உணர வேண்டும் என்றார். பேருந்து நிறுத்தங்களில் போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார். பெற்றோர்ளகும் தங்களது பிள்ளைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED உத்தரப் பிரதேச மாநில எதிர்க்கட்சித்...