×

தென் தமிழக கடலோரத்தில் கடல் சீற்றம் : மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தென் தமிழக கடலோரத்தில் கடல் சீற்றம் காணப்படுவதால் மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் காற்று வேகம் அதிகம் இருக்கும். தென்மேற்கு திசையில் 35 கிலோமீட்டர் முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும், காற்றின் வேகம் காரணமாக கடல் அலைகள் 3.5 கிலோமீட்டர் முதல் 3.7 கிலோமீட்டர் வரை எழும்புக்கூடும். குளச்சல்-கீழக்கரை வரையில் உள்ள கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காலை வெயில் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், மாலை நேரங்களில் மழை பெய்தும் வருகிறது. கன்னியாகுமரி, நெல்லை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வந்த நிலையில், தற்போது அங்கும் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு வெயில் தாக்கம் அதிகரித்து இருக்கும் என வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஒன்றிய பாஜ அரசை வீழ்த்துவதற்கு...