×

அளவுக்கு அதிகமாக வீடியோ கேம்ஸ் விளையாடுவது ஒருவித 'மனநோய்': உலக சுகாதார மையம் எச்சரிக்கை

ஜெனீவா: அளவுக்கு அதிகமாக வீடியோ கேம் விளையாடுவது, வீடியோ கேம்ஸ் ஆட உந்துதல் இருப்பது ஆகியவை மனநோயின் தாக்கம் சார்ந்த பிரச்சனையாகும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. ஸ்விட்சர்லாந்து நாட்டின் தலைநகர் ஜெனிவாவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் உலக சுகாதார நிறுவனம், திருத்தப்பட்ட சர்வதேச நோய் குறியியல் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. இந்த புதிய பட்டியலில் கட்டாயமாக வீடியோ கேம்ஸ் ஆடியே தீர வேண்டும் என்ற ஆர்வம் புதிய மனநோயின் தாக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் உலக அளவில் கோடிக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வீடியோ கேம்கள் ஆடுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் பலருக்கு வீடியோ கேம் மீதான நாட்டம் அளவுக்கு அதிகமாக உள்ளது. இது ஒருவித மனநோயாகும் என்று உலக சுகாதார மையம் சமீபத்தில் வெளியிட்ட சர்வதேச நோய்களின் வகைபாடு கொண்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘‘அறிவியல் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இந்த பிரச்சனையை மனநோயாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உலக சுகாதார மையம் ஏற்றுக்கொண்டது’’ என டாக்டர் சேகர் சக்ஸேனா தெரிவித்தார்.

இன்றைய காலகட்டத்தில் உலக அளவில் கோடிக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வீடியோ கேம்கள் ஆடுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அதில் பலருக்கு வீடியோ கேம் மீதான நாட்டம் அளவுக்கு அதிகமாக உள்ளது. அதன் காரணமாக அவர்களால் மற்ற வேலைகளில் அதிக கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதை ஒரு மனநோய் என பல அறிவியலாளர்கள் மருத்துவர்கள் கூறி வந்தனர்.இந்நிலையில் உலக சுகாதார மையம் சமீபத்தில் வெளியிட்ட சர்வதேச நோய்களின் வகைபாடு கொண்ட அறிக்கையில்

அதிகமாக வீடியோ கேம்ஸ் ஆடும் மனநிலையை கேமிங் டிஸ்சார்டர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதார மையத்தின் மனநல துறையின் தலைவர் டாக்டர் சேகர் சக்ஸேனா ‘‘கட்டாயம் வீடியோ கேம் ஆட வேண்டும் என்ற மனநிலையை மனநோயாக அறிவிப்பது உலக நாடுகள் இந்த பிரச்சினையை அடையாளம் காண உதவும்’’. ‘‘அறிவியல் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இந்த பிரச்சனையை மனநோயாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உலக சுகாதார மையம் ஏற்றுக்கொண்டது’’ என டாக்டர் சேகர் சக்ஸேனா தெரிவித்தார்.

அதேவேளையில், இந்த கருத்தை பிரிட்டன் நாட்டின் உளவியலாளர்கள் அமைப்பின் செய்தி தொடர்பாளர் டாக்டர் ஜோன் ஹார்வே மறுத்துள்ளார். வீடியோ கேம்ஸ் ஆடுபவர்களில் சிறு பிரிவினர் மட்டுமே இந்த பாதிப்புக்குள்ளாகும் நிலையில் இவ்விவகாரத்தை புதிய நோய் குறியியல் பட்டியலில் இணைப்பதால் பெற்றோருக்கு தேவையில்லாமல் கவலை ஏற்படலாம் என இவர் தெரிவித்துள்ளார்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தமிழ்நாட்டில் 39 தொகுதியில் வேட்பு...