×

விளையாட்டு துளிகள்

* பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதாக இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமால் மீது ஐசிசி குற்றம்சாட்டியுள்ளது.
* இந்திய கால்பந்து அணி இந்தோனேசியாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்பதற்கு மத்திய அரசு நேற்று அனுமதி அளித்துள்ளது.
* பிரேசில் அணி நெய்மரை மட்டுமே நம்பியிருக்கவில்லை. அந்த அணி உலக கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது’ என்று அர்ஜென்டினா அணி முன்னாள் நட்சத்திரம் மரடோனா கூறியுள்ளார்.
* கேரளாவை சேர்ந்த கிளிபின் பிரான்சிஸ் (28 வயது) என்ற ரசிகர், உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரை பார்ப்பதற்காக தனது சைக்கிளில் ரஷ்யா சென்றுள்ளார். சைக்கிளில் அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸியின் ஆட்டோகிராப் வாங்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று அவர் கூறியுள்ளார்.
* அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரில், தபாங் ஸ்மேஷர்ஸ் அணி வீராங்கனை மனிகா பத்ரா 2-1 என்ற செட் கணக்கில் வாரியர்ஸ் அணியின் சோபியா போல்கனோவாவை (உலகின் 18வது ரேங்க் வீராங்கனை) நேற்று வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.
* ஸ்பெயின் அணியுடன் நடந்த 4வது ஹாக்கி டெஸ்டில், இந்திய மகளிர் அணி 1-4 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. ஸ்பெயின் 2-1 என முன்னிலை வகிக்க, 5வது மற்றும் கடைசி போட்டி இன்று நடக்கிறது.
* ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 38 ரன் வித்தியாசத்தில் வென்றது. இங்கிலாந்து 50 ஓவரில் 342/8 (ராய் 120, பட்லர் 91); ஆஸ்திரேலியா 47.1 ஓவரில்  304 ரன் ஆல் அவுட் (ஷான் மார்ஷ் 131).


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம்

Tags :
× RELATED சில்லிபாயின்ட்..