×

கேரளாவில் கனமழைக்கு பலி 53 ஆனது: நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்

திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்த கனமழைக்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி மும்முரமாக நடக்கிறது. கேரள மாநிலத்தில், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில், அங்கு கனமழை பெய்து வருகிறது. பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர், மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது.
சாலை, தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால், வீடுகளை விட்டு மக்கள் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால், ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்தன.

மின்கம்பங்கள் கீழே விழுந்ததால், மின்சாரம் சப்ளை துண்டிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மீட்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். கனமழையால், பெரிதும் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனை நடத்தினார். மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டார்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம்

Tags :
× RELATED மோடியின் கொத்தடிமையாக செயல்படும்...