ரெப்போ வட்டி விகிதம் 0.25% அதிகரிப்பு : வீடு, வாகன கடன்களுக்கான வட்டி அதிகரிக்க வாய்ப்பு

டெல்லி: வங்கிகளின் குறுகிய கால கடன் வங்கியை (ரெப்போ) 0.25% அதிகரித்து 6.25% ஆக உயர்ந்துள்ளது என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது. 4 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த ரெப்போ வட்டி விகிதம் இந்தாண்டு உயர்த்தப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் முதல் 6 மாதங்களில் பணவீக்க விகிதம் 4.8% முதல் 4.9% ஆக இருக்கும். மேலும் ரெப்போ வட்டி உயர்வால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஆர்பிஐ கூறியுள்ளது. ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு கூட்டம் கவர்னர் உர்ஜித் படேல் தலைமையில் திங்கட்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வந்தது.

Advertising
Advertising

இதில் ரெப்போ, மற்றும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் பணத்திற்கான வட்டி விகிதமே ரெப்போ வட்டி விகிதம் ஆகும். 4 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருந்த ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி தற்போது 6 சதவீதத்தில் இருந்து 6.25 சதவிதமாக உயர்த்தி இருக்கிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதத்தல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த உர்ஜித் படேல், 2018 - 2019 ஆம் ஆண்டில் நாட்டின் பணவீக்கம் முதல் அரையாண்டில் 4 புள்ளி 8 சதவீதம் முதல் 4புள்ளி 9 சதவீதம் வரையிலும், இரண்டாவது அரையாண்டில் 4 புள்ளி 7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றார். அதே போன்று மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7 புள்ளி 5 சதவீதம் முதல் 7 புள்ளி 6 சதவீதம் வரை முதல் அரையாண்டிலும், 7 புள்ளி 3 சதவீதத்தில் இருந்து 7 புள்ளி 4 சதவீதம் வரை இரண்டாவது அரையாண்டிலும் இருக்கும் என்று தெரிவித்தார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: