மன்னார்குடியில் டிடிவி.தினகரன் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு

மன்னார்குடி: திருவாரூர் மாவட்ட அ.ம.மு.க. சார்பில் மன்னார்குடியில் வரும் 10 ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இதில் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பங்கேற்கிறார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கட்சியினர் செய்து வந்த நிலையில் நேற்று அக்கூட்டத்திற்கு மன்னார்குடி டிஎஸ்பி அசோகன் அனுமதி மறுத்து கடிதம் கொடுத்துள்ளார்.

Advertising
Advertising

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் எஸ்.காமராஜ் கூறுகையில், `இக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு மன்னார்குடி காவல் நிலையத்தில் மனு அளித்திருந்தேன்.  டிஎஸ்பி கூட்டத்திற்கு அனுமதி மறுத்து நேற்று கடிதம் கொடுத்துள்ளார். இதனை கண்டிக்கிறோம்’ என்றார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: