அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகளுக்கு எதிர்ப்பு : பிரிக்ஸ் மாநாட்டில் தீர்மானம்

பிரிட்டோரியா: அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகளுக்கு பிரிக்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் இணைந்த பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பின்  வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு தென்ஆப்ரிக்காவில் நடக்கிறது. இதில் பங்கேற்க வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்  5 நாள் பயணமாக அங்கு சென்றுள்ளார். அங்கு அனைத்து நாடுகளும் இணைந்து தீர்மானம் நிறைவேற்றின. அதில் கூறியிருப்பதாவது: உலக வர்த்தக  அமைப்பின் விதிமுறைகளுக்கு எதிராக ஒருதலைப்பட்சமான நடைமுறைகளை கொண்டு வருவதை பிரிக்ஸ் நாடுகள் கடுமையாக எதிர்க்கின்றன.

Advertising
Advertising

சர்வதேச விதிகளின்படி பிரிக்ஸ் நாடுகள் இணைந்து செயல்பட உறுதி கொள்ள வேண்டும். ஐநா மற்றும் உலக வர்த்தக அமைப்பு மற்றும் சர்வதேச  விதிமுறைகளின்படி நடுநிலைமையுடன் மறுசீரமைப்பு மேற்கொள்ள வேண்டும். உலக அளவில் உள்ள வர்த்தக பிரச்னைகளை தீர்ப்பதில் வளர்ந்து  வரும் நாடுகளின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும். வெளிப்படையான, பாரபட்சமற்ற முறையில் தடையில்லா வர்த்தகத்தை உறுதிப்படுத்த  வேண்டும்.

ஐநா மூலம் உறுதியான சர்வதேச சட்ட அடிப்படையில் கீழ் பயங்கரவாதத்தை எதிர்க்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பயங்கரவாதிகள்  மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தங்கள் பிராந்தியங்களிலிருந்து நிதியுதவி செய்வதை தடுக்க அனைத்து நாடுகளும் பொறுப்பேற்ற வேண்டும்  என கூறப்பட்டுள்ளது.  இந்த தீர்மானம் அமெரிக்கா புதிதாக கொண்டுவந்த வர்த்தக கொள்கைகளுக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிப்பதாக  அமைந்துள்ளது.

அமெரிக்காவுடன் நெருங்கிய வர்த்தக நாடுகளான கனடா, மெக்சிகோ மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து அதிக அளவு இரும்பு மற்றும்  அலுமினியம் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த இறக்குமதிக்கு அதிபர் டிரம்ப் தற்போது கடுமையான வரியை விதித்துள்ளார். மேலும் சீன  பொருட்கள் இறக்குமதிக்கும் வரி கடுமை ஆக்கப்பட்டது. இத்தகைய அமெரிக்க நடவடிக்கைகளுக்கு எதிராக பிரிக்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர்கள்  மாநாட்டில் தீர்மானம் போடப்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: