சுற்றுச்சூழலை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்

திண்டுக்கல்: உலக சுற்றுச்சுழல் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் ஈசா யோகா மையம் சார்பில்  விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. ஆண்டுதோறும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. திண்டுக்கல்லில் ஈசா யோகா மையம் சார்பில் இன்று உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பாலித்தீன் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து திண்டுக்கல் மெயின் ரோட்டில் ஈசா யோகா மையம் சார்பில் இன்று விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்ள் பாலித்தீன் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தங்களது தலை மற்றும் முகத்தை பாலித்தீன் பையால் மூடி நூதன பிரசாரம் செய்தனர். அரை மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஈசா யோக மைய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: