நீட் தேர்வை எதிர்க்க 6 மாநில முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை : நீட் தேர்வை தென் மாநில முதலமைச்சர்கள் எதிர்க்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  கேரளா, கர்நாடகா,ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிராமப்புற  மாற்றும் ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதகத்தை ஏற்படுத்துவதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

 கிராமப்புற ஏழை மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை எதிர்க்க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் மாநில மொழிகளில் நீட் வினாத்தாள் மொழி  பெயர்ப்பில் ஏராளமான பிழைகள் இருந்துள்ளது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தி பேசாத மாநில மாணவர்கள் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  பாதகமான நீட் தேர்வை எதிர்க்க பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்கள் இணைந்து நியாயமற்ற நீட் தேர்வை எதிர்க்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை  வைத்துள்ளார்.  கடந்த ஆண்டு நீட் தேர்வால் மாணவி அனிதா உயிரிழந்த நிலையில் தற்போது மாணவி பிரதீபா உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: