நர்சுகள் வேலைநிறுத்தத்துக்கு கண்டனம் : திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளி பிரிவு சிகிச்சை ரத்து

திருவனந்தபுரம் : நர்சுகள் அடிக்கடி வேலை நிறுத்தம் செய்வதை கண்டித்து திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனைகளில் நேற்று புற நோயாளிகள் பிரிவு செயல்படவில்லை. இதனால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர். கேரளாவில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் நர்சுகள் கடந்த பல மாதங்களாக சம்பள உயர்வு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அரசு நர்சுகள் சங்கத்தினர் மற்றும் தனியார் மருத்துவமனை உரிமையாளர்களை அழைத்து பல முறை அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. குறிப்பிட்ட சதவீதம் சம்பளத்தை உயர்த்தி வழங்குமாறு அரசு சார்பில் தனியார் மருத்துவமனைகளுக்கு வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதை ஏற்க தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள் மறுத்து விட்டனர். இதையடுத்து நர்சுகள் சங்கத்தின் சார்பில் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு ெதாடரப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம் சம்பளத்தை அதிகரித்து வழங்குமாறு உத்தரவிட்டது. ஆனால் ஒரு சில மருத்துவமனைகள் தவிர பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் இந்த உத்தரவை ஏற்கவில்லை.

Advertising
Advertising

இதையடுத்து நர்சுகள் மீண்டும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.  இந்தநிலையில் நர்சுகள் அடிக்கடி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை கண்டித்து, நேற்று ஒரு நாள் புறநோயாளிகள் பிரிவு செயல்படாது என்று திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். அதன்படி நேற்று திருவனந்தபுரத்தில் 30க்கும் மேற்பட்ட தனியார் மருத்துமனைகளில் புறநோயாளிகள் பிரிவு செயல்படவில்லை. இதனால் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் கடும் அவதிப்பட்டனர். ஆனால் உள்நோயாளிகள் பிரிவு வழங்கம்போல் செயல்பட்டது. தனியார் மருத்துவமனைகளின் இந்த நடவடிக்கையால் திருவனந்தபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: