சுனில் செட்ரி 100 : ரசிகர்கள் உற்சாகம்

மும்பையில் நடைபெற்று வரும் இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் இந்தியா - கென்யா அணிகள் நேற்று மோதின. இந்த போட்டி இந்திய அணி கேப்டன் சுனில் செட்ரி களமிறங்கிய 100வது சர்வதேச போட்டியாகும். பைசுங் பூட்டியாவை தொடர்ந்து இந்த சாதனை மைல் கல்லை எட்டும் 2வது இந்திய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. இந்த போட்டியைக் காண ரசிகர்கள் பெருமளவில் வர வேண்டும், இந்திய அணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று செட்ரி வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், மும்பை கால்பந்து அரங்கம் நேற்று நிரம்பி வழிந்தது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: