விருதுநகர் அருகே பிளாஸ்டிக் தயாரிப்புத் தொழிற்சாலையில் தீ விபத்து: 2 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பிளாஸ்டிக் தயாரிப்புத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் 2 கோடி மதிப்பு பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஆசிலாபுரம் பகுதியில் Palish spin என்ற தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் தயாரிப்புத் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக பிளாஸ்டிக் சாக்குகள், பீப்பாய் மற்றும் பண்டல்கள் குடோன் ஒன்றில் வைக்கப்பட்டிருந்தது. காலை 7 மணியளவில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க 8 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் தீ விபத்தில் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சேதமாகியது. இந்த தீ விபத்து காரணமாக பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கரும்பு மண்டலம் காணப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து தளவாய் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: