இந்திய பங்குச்சந்தைகளில் சரிவு

மும்பை: இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் உயர்வுடன் தொடங்கிய சென்செக்ஸ் சிறிது நேரத்திற்கு பிறகு சரிவுடன் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 137.60 புள்ளிகள் சரிந்து 35,089.66 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 48 புள்ளிகள் குறைந்து 10,696.20 புள்ளிகளாக உள்ளது. எச்.டி.எஃப்.சி வங்கி, ஆசிய பெயின்ட்ஸ், அதானி துறைமுகம், டிசிஎஸ், எச்.யூ.எல், பவர் கிரிட், விப்ரோ மற்றும் ஓஎன்ஜிசி போன்ற நிறுவன பங்குகள் விலை 1.82% வரை சரிந்து காணப்பட்டது.

Advertising
Advertising

ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.17%, ஹாங்காங்கின் ஹாங் செங் 1.33% மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 1.33% உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழிற்துறை சராசரியாக 0.90% வரை அதிகரித்து முடிந்தது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: