தோழைமைக்கட்சி தலைவர்கள் கோரிக்கைகயை ஏற்று பேரவை நிகழ்ச்சியில் திமுக இன்று பங்கேற்பு

சென்னை : 3 நாட்களுக்குப் பிறகு எதிர்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளார். கடந்த 29-ம் தேதி ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக முழுமையாக அவையை ஒத்திவைத்து பேசுவதற்கு அனுமதி கூறப்பட்டது. அதனை சபாநாயகர் ஏற்கவில்லை.

இதனால் சட்டப்பேரவை நிகழ்ச்சியை திமுக புறக்கணித்து வந்தது. தோழைமைக்கட்சி தலைவர்கள் கோரிக்கைகயை ஏற்று பேரவை நிகழ்ச்சியில் திமுக இன்று பங்கேற்றுள்ளது. நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறைக்கு நிதி ஒதுக்கீடு பற்றி இன்று விவாதம் நடத்தவுள்ளனர்.

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் உடனே  பதவி விலக வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக   மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் அவை  நடவடிக்கைகளில்  கலந்து கொள்ளாமல் புறக்கணிப்போம் என்று சட்டப் பேரவையில் மு.க.ஸ்டாலின்  பேசினார். இந்நிலையில் திமுகவின் தோழைமைக்கட்சி தலைவர்கள் கோரிக்கைகயை ஏற்று பேரவை நிகழ்ச்சியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.

கடந்த 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் நடந்த  போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தற்போது ஆலை விரிவாக்கம் செய்ய வழங்கிய நிலம் அனுமதியை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்மூலம் 2005, 2006, 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் 2வது யூனிட் விரிவாக்கத்திற்காக 342.22 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது ரத்து செய்யப்படுகிறது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: