நீலம், கறுப்பு கலரில் விளையும் கோதுமை

கோதுமை விளைச்சல் உலகளவில் மற்ற பயிர் விளைச்சலை விட பிரதான இடம் வகித்து வருகிறது. மனித உணவில் தாவரப்புரதத்தின் முக்கிய மூலமாகவும் கோதுமை விளங்குகிறது. அரிசி, சோளத்தைவிட இதில் புரதம் அதிகம். சோளம் அதிகளவில் விலங்குகளின உணவாக பயன்படுத்தப்படுவதால் அரிசிக்கு அடுத்தபடியாக கோதுமை மனிதனின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது. நீண்ட காலத்திற்கு இவற்றைப் பத்திரப்படுத்திவைக்கக் கூடியதாக இருப்பது இதன் சிறப்பு.

கோதுமையில் இருந்து பிஸ்கெட், குளுக்கோஸ், கேக்குகள், நூடுல்ஸ் போன்ற பல்வேறு உணவுப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. இதனைப் புளிக்கச்செய்து பியர் எனப்படும் மதுபானங்கள் மற்றும் உயிரி எரிபொருளும் தயாரிக்கப்படுகின்றன. கோதுமையில் வெண்கோதுமை, செங்கோதுமை என இருமுக்கிய வகைகள் உள்ளன. இருப்பினும் எத்தியோப்பியா பகுதியில் ஊதாக்கோதுமை, கறுப்பு, மஞ்சள் என்று சத்துமிக்க கோதுமைகளும் விளைவிக்கப்படுகின்றன. இருப்பினும் பல வகைகள் வர்த்தக ரீதியாக பயன்படுத்தப்படுவதில்லை.

கோதுமை வடஅமெரிக்கா, மத்திய கிழக்கிலும் முக்கிய உணவாக விளங்குகிறது. உலகில் 6ல் ஒரு பங்கு உற்பத்தியை சீனா விளைவித்து வருகிறது. கோதுமை அதிகளவு தாது உப்புக்களை உள்ளடக்கிய தானியம் ஆகும். இதில் இரும்பு பாஸ்பரஸ், மெக்னீசியம், மாங்கனீஸ், தாமிரம் மற்றும் துத்தநாகம் உள்ளன. கோதுமை மாவாக மாற்றியே பயன்படுத்தப்படுகிறது. கோதுமையில் இருந்து மைதா மாவு தயாரிக்கப்படுகிறது. இது பேக்கரி மற்றும் பல்வேறு உணவுப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. கோதுமையில் இருந்து குரூட்டாலிக் அமிலமும் எடுக்கப்படுகிறது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: