ஏற்ற இறக்கமாக இருக்கும் பெட்ரோல், டீசல் விலை! : 6வது நாளான இன்று லிட்டருக்கு 15 காசுகள் குறைப்பு

புதுடெல்லி : தொடர்ந்து 16 நாட்கள் அதிகரித்த பிறகு 6வது நாளாக பெட்ரோல் 15 காசுகளும், டீசல்  15 காசுகளும் குறைக்கப்பட்டன. கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு கடந்த மாதம் 24ம் தேதியில் இருந்து கடந்த 13ம் தேதி வரை 19 நாட்களுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வை நிறுத்தி வைத்தன. தேர்தல் முடிந்து 2 நாட்களில், அதாவது 14ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வந்தது. 19 நாட்களில் டீசல் விலை சென்னையில் ரூ3.62, டெல்லியில் ரூ3.38 உயர்த்தப்பட்டது. பெட்ரோல் விலை சென்னையில் ரூ4ம், டெல்லியில் ரூ3.80ம் அதிகரிக்கப்பட்டது. கடந்த 31ம் தேதி முதல் முறையாக காலை லிட்டருக்கு 60 காசு குறைத்ததாக அறிவித்த எண்ணெய் நிறுவனங்கள், உடனே அதை வாபஸ் பெற்று 1 காசு மட்டும் குறைத்தனர்.

Advertising
Advertising

19 நாட்களில் தொடர்ந்து 4 ரூபாய் வரை விலையை உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள், தினமும் சராசரியாக 25 காசு முதல் 30 காசு வரை உயர்த்தி வந்தன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததே இதற்கு காரணம் என மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் தெரிவித்தன. ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வலுவடைந்துள்ளது.

இவை எண்ணெய் நிறுவனங்களுக்கு மிக சாதகமான அம்சங்களாக உள்ளன. இருந்தபோதும், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வேகத்துக்கு குறைப்பதில் அவை ஆர்வம் காட்டவில்லை. சரக்கு போக்குவரத்து கட்டணம் உயர்வை தடுக்கவும், மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு வரி குறைப்பை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.இந்நிலையில் இன்றைய பெட்ரோல் விலை 15 பைசா ரூ. 80.94 ஆகவும், டீசல் விலை 15 பைசா குறைந்து லிட்டருக்கு ரூ.72.82 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.6 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 49 காசும் டீசல் விலை லிட்டருக்கு 36 காசும் குறைந்துள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: