பெரம்பலூரில் கார் விபத்து சென்னையை சேர்ந்த 2 வாலிபர்கள் பலி

பாடாலூர்: சென்னை ஆலந்தூரை சேர்ந்த பாலு மகன் மணிகண்டன்(25). டூவீலர் மெக்கானிக். இவர், தனது நண்பர்களான பஞ்சர் கடை மணி(24), கவுதம்(27), பாஸ்கர்(27), நவநீதன்(27) ஆகியோருடன் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு மொட்டை போடுவதற்காக நேற்று முன்தினம் சென்னையில் இருந்து காரில் புறப்பட்டார். நேற்று காலை 5.15 மணிக்கு பெரம்பலூர் மாவட்டம் இரூர் அருகே வந்தபோது, முன்னால் சென்ற ஒரு வாகனம் மீது கார் திடீரென மோதியது. இதில், மணிகண்டன், மணி ஆகியோர் இறந்தனர். மற்ற மூவரும் காயமடைந்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: