பாகிஸ்தான் இன்னிங்ஸ் தோல்வி தொடரை சமன் செய்து அசத்தியது இங்கிலாந்து

லீட்ஸ் : பாகிஸ்தான் அணியுடன் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 55 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இங்கிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை சமன் செய்தது. இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளிடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் ஹெடிங்லியில் கடந்த 1ம் தேதி தொடங்கியது. டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 174 ரன்னுக்கு சுருண்டது. 7 விக்கெட் இழப்புக்கு 302 ரன் என்ற ஸ்கோருடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து, முதல் இன்னிங்சில் 363 ரன் குவித்து ஆல் அவுட்டானது. ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 80 ரன் (101 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார்.

இதையடுத்து, 189 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 46 ஓவர் மட்டுமே தாக்குப்பிடித்து 134 ரன்னுக்கு சுருண்டது. இமாம் உல் ஹக் 34 ரன், உஸ்மான் சலாவுதீன் 33 ரன், அசார் அலி 11 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். முகமது ஆமிர் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் பிராடு, டொமினிக் பெஸ் தலா 3, ஆண்டர்சன் 2, கரன், வோக்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்னிங்ஸ் மற்றும் 55 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இங்கிலாந்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: