மோடி அரசின் சாதனைகளால் உலக அரங்கில் இந்தியாவின் கவுரவம் உயர்வு : மத்திய அமைச்சர் பேச்சு

பாட்னா: பீகார் மாநிலத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்காண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், இதற்கு மத்தியில் ஆட்சி புரியும் மோடி தலைமையிலான அரசே காரணம் என்றும் கூறினார். மோடி அரசின் சாதனைகளால் உலக அரங்கில் இந்தியாவின் கவுரவம் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். நேரடி அன்னிய முதலீட்டு திட்டங்களால் இந்தியாவின் ஜி.டி.பி. அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

Advertising
Advertising

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஐ.ஐ.டி.க்கள், ஐ.ஐ. எம்.க்கள், கேந்திரவித்யாலயா பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்சியில் சுமார் 31 கோடி ஜன்தன் வங்கி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. உலகின் சக்தி மிக்க தலைவர்களில் மோடியும் ஒருவராக திகழ்வதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: