கோவையில் கோவில் படிக்கட்டுகளில் வந்த காட்டு யானையை பொதுமக்கள் கல்லால் அடித்து விரட்டிய காட்சி

கோவை: கோவை அருகே யானையை கல்லால் அடித்து விரட்டும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.தடாகம், அனுபாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் படிக்கட்டில் சின்னதம்பி என்ற யானை வழிமறித்து நின்றபோது, அப்பகுதி மக்கள் கற்களைவீசி யானையை விரட்டியடித்தனர்.

அமைதியாக கடந்து செல்லும் யானைகளை இவ்வாறு கல் வீசி தாக்குவதால் அவை கோபமுற்றும் வழியில் செல்லும் பொதுமக்களை  தாக்கும் அபாயம் உள்ளதாகவும்,யானைகளை சீண்டுவோர் மீதும் கல் வீசுபவர்கள் மீது வனத்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: