உடலுக்கு தான் ஓய்வு...மனதிற்கு அல்ல : 95-வது அகவையை எட்டிய முத்தமிழ் அறிஞர்

சென்னை: நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவரான முத்தமிழ் அறிஞர் கருணாநிதி இன்று தனது 95-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஒதுங்கி உடலுக்கு ஓய்வு கொடுத்திருந்தாலும், அரசியல் சிந்தனைகளுக்கும், மனதிற்கும் ஓய்வு கொடுக்காமல் இருந்து வருகிறார் ஓய்வறியா சூரியனான கருணாநிதி. திருக்குவளை என்ற சிறிய கிராமத்தில் கடந்த 1924-ம் ஆண்டு ஜூன் 3ஆம் தேதி, , முத்துவேலர் மற்றும் அஞ்சுகம் அம்மையார் தம்பதிகளின் மகனாக பிறந்தார் கருணாநிதி. அவருடைய பெற்றோர்கள் இருவரும் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்கள். கருணாநிதி அவர்களின் இயற்பெயர் தட்ஷிணாமூர்த்தி என்பதாகும். பின்னர் அவர் தனது பெயரை ‘முத்துவேல் கருணாநிதி’ என்று மாற்றிக்கொண்டார். அவரது குழந்தைப்பருவமும், ஆரம்பக்கல்வியும் திருப்திகரமாக இல்லாதபோதிலும், அவர் தமிழ் இலக்கியத்தின் மீது மிகவும் பற்றுடையவராக இருந்தார்.

Advertising
Advertising

இயல்பிலேயே தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்த கருணாநிதி தமிழ் திரையுலகில் கதை-வசனம் எழுதி பிரபலமானார். அவருடைய திரை வசனங்கள் மூலம், அர்த்தமுள்ள சமூக செய்திகளை வெளிப்படுத்தினார். அவரது கதைகளனைத்தும், ‘விதவை மறுமணம்’,  ‘ஜமீன்தார் முறையை ஒழித்தல்’,  ‘மத பாசாங்குத்தனத்தை ஒழித்தல்’,  ‘தீண்டாமை அழிப்பு’ மற்றும் ‘சுய மரியாதை திருமணம் ஒழிப்பு’ போன்றவற்றை சார்ந்தே இருந்ததால் சமூகத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தின.

பின்னர் கடந்த 1942ல் ஆண்டு முரசொலி பத்திரிக்கையை தொடங்கினார். தனது கட்டுரைகள் மூலமாக தனது கட்சி உறுப்பினர்கள் பற்றியும், அரசியல் நிலைப்பாட்டையும் மக்களுக்கு எடுத்துரைத்தார் அவர். இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கள்ளக்குடியில் ஒரு போராளியாக பங்கேற்றார். இதுவே, அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திளது என கூறலாம். தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய தலைவராக கருணாநிதி உருவெடுத்தார். திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து 1957-ல் முதல் முறையாக மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961ல், தி.மு.க-வில் சேர்ந்தார், பின்னர்  அதன் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டில் எதிர்க்கட்சி தலைவரானார். 1967ல் திமுக கட்சி ஆட்சிக்கு வந்த போது கருணாநிதி சக்திவாய்ந்த செல்வாக்கு நிலைக்கு உயர்ந்தார்.

1967ல்  தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருந்த அண்ணாதுரை திடீர் மரணம் அடைந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பின், அண்ணாதுரை வகித்த முதலமைமைச்சர்  பதவியை கருணாநிதி ஏற்றார். அதன் பின், அவர் 1971, 1989, 1996 மற்றும் 2006 ல் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக கட்சியின் ஆணிவேராக மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு மாநில அரசியல் மற்றும் தேசிய அரசியலிலும் இன்றளவிலும் கருணாநிதி முக்கிய பங்கு வகிக்கிறார். அவரின் உடல் தான் தற்போது ஓய்வில் இருக்கிறதே தவிர மனம் நிச்சயம் பல திசைகளிலும் பயணித்து கொண்டுள்ளது. ஏறக்குறைய அவரின் 75 ஆண்டு கால பொது வாழ்வுப் பணிகள்  தமிழ்நாடெங்கும் பதிந்துகிடக்கின்றன.

அவரது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் திமுகவினர் கோலாகல கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொடி தோரணங்களுடன் இனிப்பு வழங்குதல், கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், ரத்ததான முகாம், கண் சிகிச்சை முகாம், அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்கள். கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீடு, சி.ஐ.டி. காலனி இல்லம், அண்ணா அறிவாலயம் மின் விளக்கு, தோரணங்கள், பழக் குலைகளால் அலங்கரிக் கப்பட்டுள்ளது.

திமுக  இளைஞர் அணி சார்பில் திமுக தலைவர் கருணாநிதியின் 95வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் இன்று (3ம் தேதி) மாலை 4.30 மணிக்கு அண்ணா அறிவாலயம்  கலைஞர் அரங்கில் நடக்கிறது. கல்பாக்கம் ரேவதி குழுவினர் இசையரங்கத்தை  தொடர்ந்து கருத்தரங்கம் நடக்கிறது. தமிழுலகில் கலைஞர் என்ற தலைப்பில்  வைரமுத்து, ‘தலைமை பண்பில் கலைஞர்’ என்ற தலைப்பில் பழ.கருப்பையா,  ‘கலையுலகில் கலைஞர்’ என்ற தலைப்பில் திண்டுக்கல் லியோனி, ‘இந்திய அரசியலில்  கலைஞர்’ என்ற தலைப்பில் அப்துல் காதர் ஆகியோர் பேசுகிறார்கள். விழாவிற்கு  திமுக இளைஞர் அணி செயலாளர் மு.பெ.சாமிநாதன், இணை செயலாளர் சுபா  சந்திரசேகர், துணை செயலாளர்கள் ஆர்.டி.சேகர், தாயகம் கவி எம்.எல்.ஏ.,  அசன் முகமது ஜின்னா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ., பைந்தமிழ் பாரி,  எஸ்.ஜோயல், ஆர்.துரை முன்னிலை வகிக்கிறார்கள்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: