பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 4வது சுற்றில் முகுருசா

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, ஸ்பெயின் வீராங்கனை கார்பினி முகுருசா தகுதி பெற்றார். மூன்றாவது சுற்றில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசருடன் நேற்று மோதிய முகுருசா 6-0, 6-2 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு 3வது சுற்றில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா 6-2, 6-1 என்ற நேர் செட்களில் கரோலினா பிளிஸ்கோவாவை (6வது ரேங்க், செக்.) வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.

Advertising
Advertising

பெத்ரோ குவித்தோவா (செக்.) தனது 3வது சுற்றில் 6-7 (6-8), 6-7 (4-7) என்ற நேர் செட்களில் கோன்டாவெய்ட்டிடம் (எஸ்டோனியா) போராடி தோற்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் நேற்று களமிறங்கிய நம்பர் 1 வீரர் ரபேல் நடால் 6-3, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் ரிச்சர்ட் காஸ்கேவை (பிரான்ஸ்) வீழ்த்தி கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். முன்னணி வீரர்கள் கெவின் ஆண்டர்சன் (தென் ஆப்ரிக்கா), பேபியோ பாக்னினி (இத்தாலி) ஆகியோரும் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: