சில்லி பாயின்ட்...

* இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. முதல் டி20 போட்டி ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது.

* இந்தோனேசியாவில் ஆகஸ்ட் 18ம் தேதி தொடங்கி செப்டம்பர் 2ம் தேதி வரை நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டித் தொடருக்கு 627 வீரர், வீராங்கனைகள் மற்றும் 273 அதிகாரிகள் என மொத்தம் 900 பேர் அடங்கிய மிகப் பிரம்மாண்டமான அணியை அனுப்ப இந்திய ஒலிம்பிக் சங்கம் திட்டமிட்டுள்ளது.
Advertising
Advertising

* முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் மோதவுள்ள ஆப்கானிஸ்தான் அணி, இந்த வகை போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் என்று வங்கதேச அணி ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

* பாகிஸ்தான் அணியுடன் ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்டில், இங்கிலாந்து அணி வலுவான முன்னிலை பெறும் நிலையில் உள்ளது. டாசில் வென்று பேட் செய்த பாகிஸ்தான், முதல் இன்னிங்சில் 174 ரன்னுக்கு சுருண்ட நிலையில், இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன் எடுத்திருந்தது. அலஸ்டர் குக் 46 ரன், ஜென்னிங்ஸ் 29 ரன்னில் ஆட்டமிழந்தனர். 2ம் நாளான நேற்று மழை காரணமாக ஆட்டம் தாமதமாகத் தொடங்கிய நிலையில், இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 45 ரன் எடுத்து ஆமிர் வேகத்தில் சர்பராஸ் வசம் பிடிபட்டார். அந்த அணி 43.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்திருந்தது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: