காரில் செல்லும்போது பாதுகாப்பாக லேன் மாறுவது எப்படி...?

நான்கு வழிச்சாலையில் செல்லும்போது ஏற்படும் பல விபத்துகள் லேன் மாறுவதில்தான் நடக்கிறது.இந்தியாவில் நெடுதூரம் பயணம் செய்யும் கிட்டத்தட்ட எல்லா ஊர்களும் நான்கு வழிச்சாலையில் இணைக்கப்பட்டு விட்டன. இந்தியாவில் நான்குவழிச்சாலையில் பயணிக்காதவர்களை பார்ப்பதே அரிது. இதில், இடது பக்கம் உள்ள லேன் சாதாரணமாக வாகனங்கள் செல்வதற்கும், வலது பக்கம் உள்ள லேன், முன்னால் செல்லும் வாகனங்களைவிட பின்னால் வரும் வாகனங்கள் வேகம் அதிகமாக இருந்தால் அவர்கள், ஓவர் டேக் செய்வதற்கும் அமைக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

* இதனால், 4 வழிச்சாலைகளில் செல்லும்போது உங்களுக்கான இரண்டு வழிகளில் இடது புறத்தைத்தான் அதிகம் பயன்படுத்த வேண்டும். வலதுபுற ரோட்டில் எக்காரணத்தை கொண்டும் நீண்டநேரம் செல்லக்கூடாது.

* ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் மட்டும் முழுவதும் வலதுபக்க லேனிலேயே செல்ல அனுமதியுள்ளது. மற்ற வாகனங்கள் இந்த வாகனங்களுக்கு முன்னுரிமை அளித்து வழி விட வேண்டும்.

* உங்களுக்கு முன்பாக செல்லும் வாகனம், நீங்கள் செல்லும் வேகத்தைவிட குறைவான வேகத்தில் சென்றால், நீங்கள் வலதுபுற லேனிற்கு மாறி அந்த வாகனத்தை முந்தலாம். முந்துவதற்கு முன்பாக வலதுபுறம் இன்டிகேட்டரை ஆன் செய்து மற்ற டிரைவர்களுக்கு நீங்கள் முந்த முயற்சிப்பது குறித்து தெரியப்படுத்துங்கள்.

* லேன் மாறும்போது உங்கள் வாகனத்தின் பிளைன்ட் ஸ்பாட் குறித்து அறிவது அவசியம். வலதுபக்கம் உள்ள லேனிற்கு மாறும்போது மெதுவாக ஸ்டியரிங்கை திரும்பி மாற வேண்டும்.

* வலதுபுறம் மாறிய பின்பு இன்டிகேட்டரை ஆப் செய்து விட்டு, வலதுபுறத்தில் நீங்கள் தொடர்ந்து முன்னேறி செல்லலாம். அதன்பின், இடதுபுற இன்டிகேட்டரை போட்டு விட்டு, இடது புற லேனிற்கு மாற வேண்டியது கட்டாயம். வலது புற லேனில் தொடர்ந்து பயணிப்பது ஆபத்தானது.

* இடதுபுறம் திரும்பும்போது கண்ணாடிகளில் பின்னால் வரும் வாகனத்தின் வேகத்தை தெரிந்துகொண்டு மாறுங்கள். எல்லாம் சரியாக அமைந்த பின் மெதுவாக இடது புற லேனை நோக்கி உங்கள் காரின் ஸ்டியரிங்கை திருப்புங்கள். இப்படி பாதுகாப்பாக பயணிப்பது எல்லோருக்கும் நல்லது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: