திருத்தணியில் மக்கள் சாலை மறியல்: பஸ்சை சிறைப்பிடித்ததால் பரபரப்பு

திருத்தணி: திருத்தணி அருகே குடிநீர் கிடைக்காமல் தவித்த மக்கள், சாலை மறியலில் ஈடுபட்டதுடன் பஸ்சை சிறைப்பிடித்தனர். திருத்தணி ஒன்றியம் வேலஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட வேலஞ்சேரி காலனியில் வீரபத்திரன் தெரு, தெற்கு தெரு, பெரிய தெரு உள்பட 15 தெருக்கள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும்மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவர்களுக்கு கடந்த சிலநாட்களாக சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று தெரிகிறது அத்துடன் உப்புத் தண்ணீர் மட்டுமே வினியோகம் செய்ததாக தெரிகிறது. இதனால் தினமும் வெளியில் சென்று அனைவரும் குடிநீர் எடுத்து வர வேண்டிய நிலைமை இருந்தது.

Advertising
Advertising

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்துக்கு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், திருத்தணி- நாகலாபுரம் சாலை  வேலஞ்சேரி பஸ் ஸ்டாப்  அருகே இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த அரசு மற்றும் தனியார் பஸ்களை மக்கள் சிறை பிடித்தனர்.இதுபற்றி அறிந்ததும் திருத்தணி தாசில்தார் நரசிம்மன், கிராம நிர்வாக அலுவலர் அம்ரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமணன், சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் ஆகியோர் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள், ‘’வீரபத்திரன் தெருவில் குடிநீர் பைப் லைன் இதுவரை அமைக்கப்படவில்லை. எங்களுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட வேண்டும்’ என்றனர். ‘’ உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்’ என்று அதிகாரிகள் கூறியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமார் அரைமணி நேரம்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: