நாட்டில் முதன்முறையாக மணிப்பூரில் விளையாட்டு பல்கலைக்கழகம்

புதுடெல்லி: மணிப்பூரில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சர்வதேச அளவில் அமையவுள்ள இது, நாட்டின் முதல் விளையாட்டு பல்கலைக்கழகம் என்ற பெருமையை பெறுகிறது.விளையாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக, தேசிய விளையாட்டு பல்கலைக்கழக மசோதா  மக்களவையில் கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதை செயல்படுத்தும் வகையில், மணிப்பூரில் விளையாட்டு பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.

மணிப்பூர் மாநிலம், இம்பால் மாவட்டத்தில் உள்ள கோவ்டிரக் என்ற இடத்தில் இந்த விளையாட்டு பல்கலைக்கழகம் கட்டப்பட உள்ளது. சுமார் ரூ.100 கோடி மதிப்பில், 325 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இதில், விளையாட்டு அறிவியல், விளையாட்டு தொடர்பான தொழில்நுட்பம், மேலாண்மை போன்ற பிரிவுகள், தேசிய பயிற்சி மையம் உள்ளிட்டவை அமையவுள்ளன. சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு சர்வதேச தரத்தில் இங்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதுதவிர விளையாட்டு தொடர்பான பல்வேறு படிப்புகள் இந்த பல்கலைக்கழகத்தில் அறிமுகம் செய்யப்பட்ட உள்ளன. விளையாட்டு வீரர்கள் தங்களின் திறமைகளை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் இந்த பல்கலைக்கழகம் அமையவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: