மேட்டுப்பாளையம் காய்கறிச் சந்தையில் கேரட் விலை சரிவு விவசாயிகள் கவலை

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காய்கறிச் சந்தையில், வரத்து அதிகரித்ததன் காரணமாக கேரட்டின் விலை சரிந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப் படும் மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், முள்ளங்கி போன்றவை, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சந்தைக்கு கொண்டுவந்து விற்கப்படுகின்றன. கடந்த ஆண்டு கோடை சீசனில், கேரட் வரத்து மிகவும் குறைவாக இருந்ததால், ஒரு கிலோ 70 ரூபாய் வரை விற்பனையானது.

அந்த ஆர்வத்தில் இந்த ஆண்டு ஏராளமான விவசாயிகள் கேரட்டை அதிக அளவில் பயிரிட்டுள்ளதால், கேரட்டின் வரத்து ஒரு நாளில் ஆயிரம் டன் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால், ஒரு கிலோ கேரட்டின் அதிகபட்ச விலையே 20 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது. இந்த விலை தோட்டத்திலிருந்து கேரட்டை பறிப்பதற்கான கூலி, லாரி வாடைகை செலவுக்குகூட போதுமானதாக இருக்காது என விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: