தெரிஞ்சுக்கலாம் வாங்க...!

ஆண்டிற்கு சராசரி வருமானம் ரூ.10 கோடியை தாண்டினால் அவை சிறப்புநிலை நகராட்சியாகவும், ரூ.6 கோடிக்கு மேல் இருந்தால் தேர்வுநிலை நகராட்சி, ரூ.4 கோடிக்கு மேல் இருந்தால் முதல்நிலை நகராட்சி, ரூ.4 கோடி வரை 2ம்நிலை நகராட்சியாகவும், அதற்குக்கீழ் உள்ளவை 3ம்நிலை நகராட்சியாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Advertising
Advertising

அஞ்சலகங்களில் ஆயிரம் ரூபாய் முதல் ரூ.50 ஆயிரம் வரை உடனடி மணியார்டர் அனுப்பலாம். இத்திட்டத்தில் பணம் அனுப்பிய நாளிலேயே பட்டுவாடா செய்யப்படும். பணம் அனுப்புபவருக்கு மணியார்டர் பதிவு செய்தவுடன் 16இலக்கம் கொண்ட ஒரு ரகசிய எண் தெரிவிக்கப்படும். இதை பணம் பெறுபவருக்கு அவர் தெரிவிக்க வேண்டும். பணம் பெறுபவர் இந்த 16 இலக்க எண்ணை அதற்குரிய படிவத்தில் பூர்த்தி செய்து வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், இப்பணத்தை பெற்று கொள்ளலாம். இச்சேவை இந்தியாவில் வசிப்பவருக்கு மட்டும்தான் கிடைக்கும். சேவைக்கட்டணமாக குறைந்தபட்சம் ரூ.150 முதல் அதிகபட்சமாக ரூ.330 வரை பெறப்படுகிறது.

பெரிய இந்தியப்பாலைவனம் என்று தார்ப்பாலைவனம் அழைக்கப்படுகிறது. இதன் பெரும்பகுதி அதாவது 61சதவீதம் ராஜஸ்தானிலேயே உள்ளது. இப்பாலைவனம் இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. இது பஞ்சாப், ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் பரவியுள்ளது. பாகிஸ்தானிலும் இதன் தொடர்ச்சி உள்ளது. அங்கு இதனை சோலிஸ்தான் பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது.

மிளகில் பப்பாளி விதைகள் கலப்படமாகப் பயன்படுத்தப்படுகிறது. சுருங்கி, பசும்பழுப்பு அல்லது கரும்பழுப்பு நிறத்தில் தோற்றமளிப்பதால் பார்த்தஉடனே இவற்றை எளிதாக கண்டுபிடித்து விடலாம். மேலும் கருமிளகைக் கடித்தால் ஏற்படும் காரகுணம் பப்பாளிவிதையை கடித்தால் ஏற்படாது. இதை வைத்தும் உணர்ந்து கொள்ளலாம்.

மஞ்சள்தூளில் நிறமேற்றப்பட்ட மரத்தூள் கலப்படமாகப் பயன்படுத்தப்படுகிறது. கண்ணாடி டம்ளரில் இந்த மஞ்சளை போட்டு தண்ணீர் ஊற்றிக் கலக்கினால் மஞ்சள் கரையும். மரத்தூள் தண்ணீரில் மிதக்கும். இதை வைத்து கலப்படம் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: