60 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்ட ராஜராஜசோழன், உலகமாதேவி சிலைகள் தஞ்சை பெரிய கோயிலில் ஒப்படைப்பு

கும்பகோணம் : 60 ஆண்டுகளுக்குபின் குஜராத் மியூசியத்தில் இருந்து மீட்கப்பட்ட ராஜராஜசோழன், உலகமாதேவி சிலைகள், தஞ்சை பெரிய கோயிலில் ஒப்படைக்கப்பட்டது. தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜசோழன், அவரது பட்டத்தரசியான உலகமாதேவிக்கு அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே பஞ்சலோக சிலைகள், ராஜராஜனின் படை தளபதியான சேனாதிபதி மும்முடிச்சோழ பிரம்மராயனால் வடிவமைக்கப்பட்டது. இந்த 2 சிலைகளும், தஞ்சை பெரிய கோயிலின் மூலவரான பெருவுடையாரை நோக்கி வணங்குவதுபோல் வைக்கப்பட்டிருந்தது. தஞ்சை பெரிய கோயிலில் இருந்த ராஜராஜசோழன், உலகமாதேவியின் சிலைகள் 60 ஆண்டுகளுக்கு முன் மாயமானது. இந்தநிலையில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்,  குஜராத் அருங்காட்சியகத்துக்கு சென்று ராஜராஜசோழன், உலகமாதேவி சிலைகளை மீட்டு சென்னைக்கு கடந்த 28ம் தேதி கொண்டு வந்தனர். சென்னையில் இருந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணம் கோர்ட்டுக்கு நேற்று காலை காரில் கொண்டு வரப்பட்டது.

மதியம் 2 மணிக்கு நீதிபதி முன் சிலைகளை போலீசார் ஒப்படைத்தனர். இதையடுத்து அந்த சிலைகளை அறநிலையத்துறையிடம் ஒப்படைக்குமாறு நீதிபதி கூறினார். அதன்பின், சிலைகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன் பெற்று கொண்டார். இதைதொடர்ந்து திருவையாறில் உலகமாதேவி கட்டிய வடகயிலாயம் கோயிலில் 2 சிலைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் தஞ்சை பெரிய கோயிலுக்கு சிலைகள் கொண்டு சென்று வைக்கப்பட்டது. இதுகுறித்து சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஜஜி.பொன்மாணிக்கவேல் கூறும்போது, ``தஞ்சை பெரிய கோயிலில் வைக்கப்படும் ராஜராஜசோழன், உலகமாதேவி சிலைக்கு இரவு, பகலாக சுழற்சி முறையில் 6 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டுமென எஸ்.பி. செந்தில்குமாருக்கு உத்தரவிட்டுள்ளேன்’’ என்றார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: