‘சீதைதான் முதல் டெஸ்ட் டியூப் குழந்தை’உ.பி. துணை முதல்வர் பேச்சால் பாஜ அதிருப்தி

லக்னோ  : ‘‘உலகின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தை சீதாதான்’’ என உத்தர பிரதேச துணை முதல்வர் தினேஷ் ஷர்மா கூறியுள்ள  கருத்தால் பாஜ தலைமை அதிருப்தி அடைந்துள்ளது. உத்தர பிரதேசத்தல் நேற்று முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இம்மாநில துணை முதல்வர் தினேஷ் ஷர்மா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இலங்கையில் இருந்து ராமர் புஷ்பக விமானத்தில் இந்தியா திரும்பினார் என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம்தான்.

இதுவே தற்போதைய விமானங்களுக்கு எல்லாம் முன்னோடியாக இருப்பவை. இதேபோல் கலப்பையில் இருந்து தோன்றிய சீதை தான் தற்போதைய டெஸ்ட் டியூப் குழந்தைகளுக்கு முன்னோடியாக உள்ளார்” என்று தெரிவித்தார். இதனால், பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் அதிருப்தி அடைந்த  பாஜ தேசிய பொதுச் செயலாளர் புபேந்தர் யாதவ், ஷர்மாவை நேரில் அழைத்து கண்டித்தார். இந்த கருத்தால் பாஜ தலைமை அதிருப்தி அடைந்துள்ளதாக அவரிடம் கூறினார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: