ஓ.என்.ஜி.சி.யை பின்னுக்கு தள்ளிய இந்தியன் ஆயில்: அதிக லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனமாக உருவெடுப்பு

டெல்லி: இந்தியாவின் அதிக லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனமாக இந்தியன் ஆயில் நிறுவனம் உருவெடுத்துள்ளது. கடந்த 2017-18ம் நிதியாண்டில் 21 ஆயிரத்து 346 கோடி ரூபாய் லாபத்தை ஈட்டியுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி நாட்டின் அதிக லாபம் ஈட்டும் பொதுத் துறை நிறுவனமாக அது உருவெடுத்துள்ளது.

அதேபோல் நாட்டின் அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக முகேஷ் அம்பானியின் ரிலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உருவெடுத்துள்ளது. கடந்த நிதியாண்டில் அந்நிறுவனம் இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.36 ஆயிரத்து 75 கோடி லாபத்தை ஈட்டியுள்ளது. அதற்கு அடுத்து, இந்தியாவின் மிகப் பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளது. இதன் நிகர லாபம் ரூ. 25 ஆயிரத்து 880 கோடி ஆகும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: