லார்ட்ஸ் டி20 போட்டி : உலக லெவன் அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்

லண்டன்: உலக லெவன் அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் டாஸ் வென்ற உலக லெவன் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லீவிஸ் 58, ராம்தின் 44, சாமுவேல்ஸ் 43 ரன்கள் எடுத்தனர். 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உலக லெவன் அணி களமிறங்கியது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் துல்லியமான பந்து வீச்சால் உலக லெவன் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 16.4 ஓவர்களில் 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. உலக லெவன் அணியில் அதிகபட்சமாக பெரேரா 61 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிறப்பாக பந்து வீசிய கெஸ்ரிக் வில்லியம்ஸ் 3, ஆந்த்ரே ரஸ்ஸல், சாமுவேல் பத்ரீ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கடந்த ஆண்டு இர்மா மற்றும் மரியா புயல் தாக்கியதில் வெஸ்ட் இண்டீசின் 5 கிரிக்கெட் மைதானங்கள் பெரும் சேதத்தை சந்தித்தன. இந்த ஸ்டேடியங்களை புதுப்பிப்பதற்காக புயல் நிவாரண நிதி திரட்டும் இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: