அதிமுகவில் நிர்வாகிகள் மீண்டும் சேர்ப்பு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வடசென்னை வடக்கு (கிழக்கு), தென் சென்னை வடக்கு, திருவள்ளூர் கிழக்கு மாவட்டங்களில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த   வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தை சேர்ந்த வீரமருது பாண்டியன், (பெரம்பூர் பகுதி அதிமுக முன்னாள் பொருளாளர்) தென்சென்னை வடக்கு மாவட்டம், ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி, (ஜெயலலிதா பேரவை முன்னாள் பகுதி துணைச் செயலாளர்), கிராமத் தெரு ஆறுமுகம், (ஜெயலலிதா பேரவை முன்னாள் பகுதி துணைச்செயலாளர்), அனில்குமார், (ஜெயலலிதா பேரவை முன்னாள் பகுதி பொருளாளர்), ராஜ்குமார் (எ) பாண்டிகுமார் (109 தெற்கு வட்ட முன்னாள் செயலாளர்), நுங்கை விவேக் (110 வடக்கு வட்ட முன்னாள் செயலாளர்) திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த காசிராஜா (8வது வட்ட முன்னாள் அவைத் தலைவர், திருவொற்றியூர் பகுதி), சுரேஷ் (முகப்பேர் மேற்கு, மதுரவாயல் பகுதி), குமார் (பாரதி தெரு, வி.ஜி.பி. நகர், முகப்பேர், மதுரவாயல் பகுதி) ஆகியோர் தங்களது செயலுக்கு வருந்தி நேரிலும் கடிதம் மூலமும் மன்னிப்புக் கோரி தங்களை மீண்டும் அதிமுகவில் இணைத்துக்கொள்ள வேண்டி கேட்டுக் கொண்டதால், இன்று முதல் அதிமுக உறுப்பினர்களாக இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertising
Advertising

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: