தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் அரை நாள் முதல்வராக பதவியேற்று ஓய்வு பெற்ற 8 பேர் : உயர்கல்வித்துறையில் கேலிக்கூத்து என குற்றச்சாட்டு

கோவை: தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் 8 பேர், அரைநாள் முதல்வராக பதவியேற்றது சிறிதுநேரத்திற்குபின் பணி ஓய்வுபெற்று வீட்டுக்கு  சென்றனர். உயர்கல்வித்துறையில் பேராசிரியர் பணியிடம் நிரப்புதல், ஊதியத்தை தன்னிச்சையாக நிர்ணயித்தல், தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு  வழங்காமை தடுத்தல் உள்ளிட்ட பல முறைகேடு அரங்கேறி வருகிறது.  குறிப்பாக, கல்லூரி கல்வி இயக்குனராக உள்ள மஞ்சுளா, பணி ஓய்வு  ெபற்றும் அரசியல் செல்வாக்குடன்  பணிக்காலநீட்டிப்பு பெற்றுக்கொண்டு பணியாற்றி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.

Advertising
Advertising

இந்தநிலையில், மே 31ம் தேதியுடன் (நேற்று) இயக்குனர் மஞ்சுளா ஓய்வுபெறுவதாக அண்மையில் கோவையில் சுனில்பாலிவால் தெரிவித்தார்.  மேலும், தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் இணை பேராசிரியர்கள் 29 பேருக்கு இரண்டாம் நிலை அரசு கல்லூரிகளுக்கு முதல்வராக பதவி உயர்வு  வழங்கி மஞ்சுளா நேற்று மதியம் உத்தரவிட்டார். இந்த சுற்றறிக்கை அனைத்து கல்லூரி முதல்வருக்கும் அனுப்பப்பட்டது. இதையடுத்து, 29 பேர் தங்கள்  பேராசிரியர் பணியை விடுவித்து, அவசர அவசரமாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரிகளுக்கு சென்று மாலையில் முதல்வராக பதவியேற்றனர்.

அதன்படி கோவை அரசு கலைக்கல்லூரி தாவரவியல் துறை பேராசிரியர் ரங்கநாயகி, காங்ேகயம் அரசு கலைக்கல்லூரி முதல்வராகவும், கோவை அரசு  கலைக்கல்லூரி வேதியியல் துறை ேபராசிரியர் ஜமுனாராணி, கோவை அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வராகவும் பதவி ஏற்றனர். இவர்கள்  உட்பட தமிழகம் முழுவதும் 8 பேர் அரைநாள் கல்லூரி முதல்வராக இருந்து மாலையில் பணி ஓய்வு பெற்றது உயர்கல்வித்துறையில் சலசலப்பை  ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேராசிரியர்கள் கூறியதாவது: கடந்த டிசம்பர் மாதம் ஒரு குளறுபடியான முதல்வர் பணிமூப்பு பட்டியல் வெளியிடப்பட்டது. அதில்  பட்டியலில் 14வது இடம் பெற்ற மாநில கல்லூரி பேராசிரியர் ஒருவருக்கு பட்டியலில் இடம்பெற்றும், அவருக்கு முதல்வர் பணி வழங்கவில்லை. இதை  எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர்கல்வித்துறை தரப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் பணியிடம்  ஒதுக்கப்படும் என பதில் அளித்தபின், வழக்கு மீதான தடையை கடந்த ஏப்ரல் 29ம் தேதி நீதிமன்றம் நீக்கியது.

வழக்கு தொடர்ந்தவர் உள்பட 7 ேபருக்கு பணி ஓய்வு காரணமாக, முதல்வர் பணியிடமும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. பின்னர் ஒரு மாதம்  முதல்வர் பெயர் பட்டியலை வழங்காமல் உயர்கல்வித்துறை நிறுத்திவைத்துவிட்டு, தற்போது மே 31ம் தேதி (இன்று) முதல்வர் பட்டியலை வெளியிட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. காலதாமதமாக வெளியிட வேண்டிய அவசியம் என்ன?, இதனால் தமிழகம் முழுவதும் 8 பேர் அரைநாள்  முதல்வராக பதவியேற்றபின், முதல்வர் பதவியிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டனர். இதனால் உயர்கல்வித்துறையே கேலிக்கூத்தாக்கியுள்ளது.  கல்லூரி முதல்வராக பதவியேற்றதும், பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் யாருக்குமே தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: