விமான பாகம் வாங்க 17.55 கோடி லஞ்சம் பாதுகாப்பு துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மோடிக்கு ராகுல் கோரிக்கை

புதுடெல்லி: ‘விமான பாகம் கொள்முதலுக்காக உக்ரைனிடம் 17.55 கோடி லஞ்சம் வாங்கிய மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை  எடுக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். உக்ரைன் நாட்டில் இருந்து ஏஎன் 32 என்ற விமானத்தின் பாகங்களை வாங்க மத்திய பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்துக்காக  உக்ரைன் அரசிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை  மத்திய பாதுகாப்புத் துறை அதிகாரிகள் லஞ்சமாக பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், `பாஜ பாதுகாப்புத் துறை ஊழல்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள  பதிவில் கூறி இருப்பதாவது:

ஏஎன் 32 ரக விமான பாகங்களை கொள்முதல் செய்வதற்காக மோடி அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் உக்ரைன் அரசிடம் இருந்து  கோடிக்கணக்கான ரூபாயை துபாய் உதவியுடன் லஞ்சமாக பெற்றுள்ளதாக செய்தித்தாளில் செய்தி வெளியாகியுள்ளது. எனவே, மோடி அவர்களே...  நீங்கள் தலையிட்டு லஞ்சம் பெற்ற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Related Stories: