×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: முதல்வர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது கொலை வழக்கு பதிவு செய்ய ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சட்டம் ஒழுங்கு டிஜிபி, உளவுத்துறை ஐ.ஜி மீதும் கொலைவழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் முதல்வர் டிஜிபி., ஐஜி உள்ளிட்டோர் கூட்டு சதி செய்துள்ளனர் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டை  நியாப்படுத்துவதாக அதிமுக அரசுக்கு  ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்டவர்களின் உடல்களை போலீஸ் இழுத்து வரும் வீடியோ வெளியாக உள்ளன. சீருடை அணியாத போலீஸ் குறிபார்த்து துப்பாக்கியால் சுடும் காட்சி வெளிவந்துள்ளது. ஸ்டெர்லைட் போராட்டத்தை வழிநடாத்தியவர்கள் குறி வைத்து சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

சுட்டுக்கொல்ல சதித்திட்டம்

போராட்டக்காரர்களை சுட்டுக்கொல்ல முன்கூட்டியே சதி செய்தது தெளிவாகிறது. முதல்வர் டிஜிபி க்கு தெரியாமல் துப்பாக்கிச்சூடு நடந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்த்துறை மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார். 13 பேரை கொன்ற காவல்துறையினர் திரைமறைவில் காப்பாற்றப்பட்டு வருகின்றனர். துப்பாக்கிச்சூட்டில் இறந்தோரின் உண்மையான எண்ணிக்கையை வெளியிட வேண்டும் என்று கூறினார். இளம்பெண்ணை வாயில் சுட்டு கொன்றவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.

ரூ. 1 கோடி நிவாரணம் தேவை

துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் தேவை என்று கூறினார். ஸ்டெர்லைட் நிர்வாகம் செலுத்திய அபராதம் ரூ.100 கோடி தூத்துக்குடி ஆட்சியரிடம் உள்ளது என்று தெரிவித்தார். ரூ.100 கோடி அபராத தொகையிலிருந்து நிவாரணம் தரவேண்டும் என்று ஸ்டாலின் கூறினார். 


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தமிழ்நாட்டில் 39 தொகுதியில் வேட்பு...