×

அயர்லாந்து நாட்டில் கருக்கலைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டுவர மக்கள் ஆதரவு

டப்ளின்: கருக்கலைப்புக்கு எதிராக நடைபெற்ற அமைதி புரட்சியின் எதிரொலியாக அயர்லாந்தில் கருக்கலைப்பு தடை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. அயர்லாந்து நாட்டில் கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பில் இந்த சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கு ஆதரவாக 66 புள்ளி 4 சதவித மக்கள் வாக்களித்து அதரவு தெரிவித்துள்ளனர். தற்போதைய சட்டப்படி தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருந்தால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய முடியும். இந்நிலையில் கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பாக வாக்கெடுப்பு நடைபெற்றது.

இதனையடுத்து கருவில் இருக்கும் குழந்தைக்கும் உயிர்வாழ சம உரிமை உண்டு என்று கூறும் 8-வது பிரிவு கருக்கலைப்பு சட்டத்தில் இருந்து நீக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. புதிய சட்டம் அமல் செய்யப்பட்ட பிறகு கருத்தரித்து 12 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என்று அந்நாட்டு அரசு குறியுள்ளது. இது குறித்து அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் கூறுகையில் தனது நாட்டின் 'அமைதியான புரட்சி' இது என்று பாராட்டியுள்ளார். மேலும் இந்த வருடத்தின் இறுதியில் புதிய கருக்கலைப்பு சட்டம் இயற்றப்படும் என லியோ வரத்கர் தெரிவித்தார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED நாடு முழுவதும் 2ம் கட்ட மக்களவை தேர்தல்: 63.50 சதவிகித வாக்குப்பதிவு