×

காவல்துறையை காவி மயமாக்கும் முதல்வர் பதவி விலகுவதே மக்களுக்கு பாதுகாப்பு: மு.க.ஸ்டாலின் சாடல்

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது என திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தூத்துக்குடி சென்றார். ஆனால், தடையை மீறி தூத்துக்குடி சென்றதற்காக விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவரை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர். அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 15 நாட்கள் புழல் சிறையில் அடைக்க திருக்கோவிலூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது என திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது, 'தூத்துக்குடியில் 13பேரை கொலை செய்த போலீஸ் அதிகாரிகள் மீது ஒரு வழக்குக் கூட பதிவு செய்ய துப்பில்லாத அதிமுக அரசு, தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் அவர்களை கைது செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.காவல்துறையை காவி மயமாக்கும் முதல்வர் பதவி விலகுவதே மக்களுக்கு பாதுகாப்பு' என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED நெல்லையில் பற்கள் பிடுங்கிய விவகாரம்;...