×

11 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட்ட நாட்டின் முதல் ஸ்மார்ட் சாலையை திறந்து வைத்தார் மோடி

டெல்லி: டெல்லியில் இருந்து மீரட் வரையில் ரூ.11,000 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள 14 வழி விரைவு சாலையை  பிரதமர் மோடி திறந்து வைத்தார். சாலையை திறந்து வைத்து, திறந்த வாகனத்தில் 10 கி.மீ. வரை பிரதமர் மோடி பயணம் செய்தார். சாலையின் இருபுறத்திலும் திரண்டிருந்த மக்களை பார்த்து கையசைத்தபடி மோடி பயணித்தார். இதுவே நாட்டின் முதல் ஸ்மார்ட் மற்றும் பசுமை வழிச்சாலை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிநவீன வசதிகள்
மொத்தம் 135 கி.மீ., நீளமுள்ள இந்த நெடுஞ்சாலையில் விளக்குகள் சூரிய ஒளியில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 500 மீட்டர் தூரத்திற்கும் மழைநீர் சேமிப்பு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாகனங்களின் வேகத்தை சிறப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு, அதன் மூலம் அதிகவேகமாக செல்பவர்களுக்கு தானாக அபராத ரசீது வழங்கும் வசதியும் இந்த சாலையில் உள்ளது. இந்த சாலையில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பயண நேரத்தை குறைக்கும்
இந்த நெடுஞ்சாலையில் இந்தியாவின் 36 நினைவுச்சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நெடுஞ்சாலையால் டில்லியின் காற்று மாசு 27 சதவீதம் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையால் டில்லி - மீரட் இடையேயான பயண நேரம் 2 மணி நேரத்தில் இருந்து 45 நிமிடங்களாக குறையும். மேலும் இமாச்சலில் இருந்து உ.பி., செல்பவர்களும், ராஜஸ்தானில் இருந்து இமாச்சல் செல்பவர்களும் டில்லிக்குள் வராமலேயே செல்ல முடியும்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED நாடாளுமன்ற 2ம் கட்ட தேர்தல் பிரசாரம்...