வாடிக்கையாளர்களின் தனிநபர் விபரங்கள் லீக் ஆக வாய்ப்பே இல்லை: பேடிஎம்(Paytm) திட்டவட்டம்

நொய்டா: வாடிக்கையாளர்கள் தனிநபர் விபரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகவும், ஒருபோதும் மூன்றாவது நபர்களுக்கோ அல்லது அரசிற்கோ வழங்கப்பட மாட்டாது என பேடிஎம் நிறுவனம் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. டிஜிட்டல் முறை பணப்பரிவர்த்தனை செயலியாக, பேடிஎம்  விளங்குகிறது. இதன் மூலம், சாதாரண கடை முதல், பெரிய வங்கிகள் வரையில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.

இந்த நிலையில், தன்னிடம் உள்ள தனிநபர் வாடிக்கையாளர்கள் விவரங்களை பேடிஎம் நிறுவனம், மூன்றாம் நபர்களிடம் பகிர்ந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த குற்றச்சாட்டை பேடிஎம் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. தமது வாடிக்கையாளர்களின் விபரங்களை மூன்றாம் நபரிடம் பகிர்ந்துவிட்டதாக கூறப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு மாறானது என பேடிஎம் கூறியிருக்கிறது.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

× RELATED நாடு முழுவதும் கடந்த 15 மாதங்களில் 73. 50...