×

பாகிஸ்தான் அபார பந்துவீச்சு : இங்கிலாந்து சரண்டர்

லண்டன் : இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 184 ரன்னில் ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 350 ரன்களுடன் இருந்தது. முகமது அமிர் 19, முகமது அப்பாஸ் ரன் ஏதுமின்றி இருந்தனர். இந்நிலையில், 3ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இதில் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 363 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அப்பாஸ் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். அமிர் 24 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

179 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, பாகிஸ்தானின் அபார பந்துவீச்சால் தடுமாறியது. கேப்டன் ஜோ ரூட் (68 ரன்) மட்டும் பொறுப்புடன் ஆட மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். தேநீர் இடைவெளிக்குப் பிறகு இங்கிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 133 ரன்களுடன் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடியது. பட்லர் 20, பீஸ் 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் அமிர், அப்பாஸ், ஷதப் கான் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.



வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED ஐதராபாத் – பெங்களூரு அணிகள் இடையே...